Sunday, February 12, 2017

கலைஞரும் பார்பணரும் ...

Bharani Dharan

அமைதியான அழகான அக்ரஹாரம்
ஊர் கணக்கப்பிள்ளை கிச்சாம் ஐயரின் குழாய்ஓடு பதித்த மச்சு வீடு.
ஆண் பிள்ளைகள் நான்கு, அழகான பெண் குழந்தை ஒன்று. ஊர் கணக்கபிள்ளை (VAO) என்பதால் விளை நிலங்கள் பல ஏக்கர்களை தனது மற்றும் உறவினர்கள் பெயரில், பாட்டா பதிவுகள் தனது அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால்,
வயலுக்கு பெயரே ஐயர் கிராமம் தனி ஏரிப் பாசனம்.
ஊர் குடியானவன் உழுது விதைத்து அறுவடை செய்து ஐயர் வீட்டு தின்னையில் அடுக்கி, சாமி பாத்து குடுக்கிறதை வாங்கிக்குறோம் எஜமான் என்ற அதிகாரம்.
கடைவீதியில் வரிசையாக ஐந்து கடைகள் அதில் பிராமனாள் காபி கடையும் ஒன்று.(அவாளுக்கு மட்டும்) மற்றவை வாடகைக்கு.
உழுதவர்களுக்கு நிலம் சொந்தம் சட்டம் வந்தது. பெருவாரியான விளை நிலங்களை கிச்சாம் ஐயர் இழக்க நேரிட்டது. பின்னர் கணக்கப்பிள்ளை வேலையையும் இரவோடு இரவாக தமிழகம் முழுவதும் நீக்கியதில் மேலும் ஒரு அடி விழுந்தது கிச்சாம் ஐயருக்கு..
வருமானமும் குறைந்து ஊரில் அதிகாரத்தையும் இழந்த ஐயர்! திராவிட கட்சிகளை திட்டி வாய் வலித்த காலம்...
பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூரில் வேலை செய்து குடும்பத்தை நடத்தினர்.
தன்னோடு படித்த சக குடியான மாணவன் மதியழகனோடு ஓடி போய் திருமணம் செய்து கொண்ட ஒரே மகள்.
காலங்கள் கடந்தது ஐயர் கிராமத்தில் இருந்த மீதி நிலங்களையும் விற்று வாழ வேண்டிய சூழல் ஐயருக்கு.
கடை வாடகையை மட்டும் வாங்கி வாழ்ந்த கிச்சாம் ஐயரும் கண்ணை மூடிவிட்டார்.
கடையையும் வீட்டையும் விற்று பிரித்துக்கொள்ள விலை பேசப்பட்டு பத்திரப் பதிவு நேரத்தில் மகள் ஒருவர் இருப்பது வாங்குபவருக்கு தெரியவர, சாதி விட்டு சாதி ஓடியவள் எங்கள் தங்கையே இல்லை என்ற வாதம் எடுபடாமல், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்று சட்டம் சொல்வதால் ஆந்திரா சென்று அழைத்து வரப்பட்டாள் மகள்..
குடிகார கணவனை இழந்து பிள்ளைகளை வளர்க்க வீட்டு வேலை செய்து வாழ்ந்து வந்த ஐயரின் மகள் வந்ததும்....
கையெழுத்துப் போட்டு, தனது பங்குத்தொகையான #ரூ50லட்சத்தை பெற்றுக்கொண்டு சொன்னாள் நல்லா இருக்கனும் #கலைஞர்"னு.
ஆந்திராவில் இந்த சட்டம் (அப்பொழுது) இல்லை ,கலைஞர் இங்கு கொண்டு வந்ததால் இனி ஆந்திராவில் இருக்கும் என் பிள்ளைகளை காப்பாற்றி அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பேன் என்றவள் கண்களில் ஆனந்த கண்ணீர் மாலை மாலையாக.......-ராஜேந்திரன்

No comments:

Post a Comment